செல்போன் பேலன்ஸ்

"ஒருவழியா பேசித் தீர்த்துட்டேன்...."

"ஏதாவது பிரச்சினையா...?"

"ம்ஹும்... என் செல்போன்ல இருந்த பேலன்ஸை பேசித் தீர்த்துட்டேன்...!"

அ.பேச்சியப்பன், ராஜபாளையம்


 "அவர் கொஞ்சம் உடம்பு நல்லா இல்லைன்னாகூட "செக்கப்" பண்ணக் கிளம்பிடுவாரு..."

"உடம்பு நல்லா இருந்தா...?"

"பிக்கப் பண்ணக் கிளம்பிடுவாரு...!"

எஸ்.ஏ.கருணாநிதி, ஓசூர்


"டாக்டர்.... சாதம் சாப்பிட்டா வெயிட் போடுவோமா?"

"இல்லியே, வெயிட் போட்டாத்தான் சாதமே சாப்பிட முடியும்...!"

"நீங்க என்ன சொல்றீங்க...?"

"நான் குக்கர்ல போடற வெயிட்டை சொல்றேன்!"

கூடல்


"விஷய ஞானத்தோட நல்லா பேசறீங்களே, "பேசாம" நீங்க பெரிய பேச்சாளர் ஆயிடலாமே!"

"பேசாம" எப்படிங்க பேச்சாளர் ஆக முடியும்?"

கூடல்


போலீஸ் : இப்படியே ஊர் சொத்தை எல்லாம் கொள்ளை அடிக்கிறியே, உனக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லே?

திருடன் : அதுக்குத் தான் ஐயா முகமூடி போட்டுக்கிறேன்.

எம்.எஸ்.ராஜப்பா

இந்தியா,பாகிஸ்தான்,இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தறப்பு ஒருதின கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரம் அது.

அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி சென்னையில் நடந்துகிட்டு இருக்கு.

போட்டியை காண லக்க்ஷக்கணக்கில் கூட்டம் கூடி இருக்கு.

விறுவிறுப்பா இந்திய அணி அடித்த 291 ரன்களை பாகிஸ்தான் அணியின் வீரர்கள் துரத்திகொண்டிருந்தார்கள்.

அப்போ பாகிஸ்தான் வீரர் அப்ரிடி (afridi), இந்திய வீரர் எறிந்த பந்தை சிக்ஸ் (6) அடிக்க விண்ணை நோக்கி பந்தை பரக்க விட,காமெராக்கள் அனைத்தும் பந்தை விண்ணில் காட்ட, மக்கள் அனைவரும் பந்து பவுண்டரி தாண்டி விழுமா என்று எதிர்பார்போடு பந்தை பார்த்துகொண்டிருகார்கள்.

ஆனா பந்து பவுண்டரி தாண்டி கூட்டத்தில் பாகிஸ்தான் நாட்டு கொடியை ஒரு கையில் கொண்டு மடியில் கை குழந்தையோட அமர்ந்து, மொபைல் போனில் பேசிகொண்டிருக்கும் அந்த பெண்ணை நோக்கி பறந்துகொண்டிருக்கு.

அப்போ தான் சார் நீங்க, அப்படியே பறந்து போய் கொழந்தைய கொள்ள வர அந்த பந்தை ஏர்லையே பிடிச்சி அந்த உசுர காப்பாத்துறீங்க.

இங்க தான் இளையதளபதி இன் (in) "இடியரசன்" அப்படின்னு படத்தோட டைட்டில் போடுறோம் சார்.

எதிரி நாட்டு கொழந்தையோட உயிரை கூட மதிச்சி ரிஸ்க் எடுத்து காப்பாத்தின உங்கள எல்லாரும் தோளுல தூக்கிட்டு ஆடுறாங்க..

இங்க உங்க அறிமுக பாட்டு (introduction song) வைக்கிறோம் சார்..

"எமனுக்கு எமன் டா,

கொழந்தையுல்லாம் கொண்டவன்டா

இடியோடு மோதினா,

நீ அட்ரஸ் இல்லா ஆளுடா..... "

அப்படின்னு தேவி ஸ்ரீ பிரசாத் மியூசிக்ல ஒரு பாட்டு வைக்கிறோம் சார்.

பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கம் உங்களுக்கு பாராட்டு தெரிவிச்சி டெல்லில விருது தராங்க சார்.

விருது வாங்கிட்டு நீங்க சென்னை விமான நிலையத்துல கால் எடுத்து வைக்கறீங்க,உடனே எல்லாருக்கும் முன்னாடி உங்கள ஒரு பொண்ணு கட்டி புடிச்சி முத்தம் கொடுக்க உங்க ரெண்டு பேருக்கும் காதல் ஸ்டார்ட் ஆகுது சார் என்று இயக்குனர் சொல்லி கொண்டிருக்க.

மீதி கதையை கேட்காமல், நீங்க போய் தயாரிப்பாளர பாருங்க.நான் ஓகே சொன்னேன்னு சொல்லுங்க என்று மகிழ்ச்சியுடன் கூறி அனுப்பினார் நடிகர்.


car engine

ஒரு சர்தார்ஜி வெளிநாட்டுக் கார் வாங்கினார். அதில் எஞ்சின் பின்புறம் இருந்தது அவருக்குத் தெரியாது. ஒருநாள் காரில் போகும்போது கார் பழுது பட்டுப் போயிற்று.மு ன்புறம் திறந்து பார்த்தவருக்கு எஞ்சினைக் காணவில்லை என்று ஒரே அதிர்ச்சி.

அப்போது அதே மாடல் கார் ஒன்றை ஓட்டிக்கொண்டு இன்னொரு சர்தார்ஜி வந்தார். விஷயத்தைக் கேள்விப் பட்டதும் சொன்னார். "கவலைப்படாதே.. என் டிக்கியில் ஸ்பேர் எஞ்சின் இருக்கு.. எடுத்துக்கோ..!"

தபால்

தபால்காரர்- உங்க பார்சலை கொண்டுவர நான் ஏழு கிலோமீட்டர் நடந்துவரேன்.

சர்தார்ஜி; ஏன் இவ்வளவு தூரம் நடந்து வறீங்க,பேசாம தபால்ல அனுப்பியிருக்கலாமே?


smariappan's படம்

சிரிப்பு 18

ரமனன் : ரெண்டு நாளா என் பையனைக் காணோம்
முராரி : அப்படியெல்லாம் சந்தேகமா என்னைப் பார்க்காதீங்க சார். என் பொண்ணு வீட்டுலதான் இருக்கா.
Big smile Big smile Big smile

ரமனன் : "வேலு பறவையிலேயே எந்தப் பறவை நல்லாப் பாடும் சொல்லு?"
வேலு : "பரவை முனியம்மா, சார்"
Big smile Big smile Big smile

மனைவி : "ஒரு நாள் வேலைக்காரி இல்லைன்னா கூட வீடே சரியில்ல பாருங்க."
கணவன் : "இது பரவாயில்லை. எனக்கு மனசே சரியில்லாம போயிடுது பாரு."
Big smile Big smile Big smile


smariappan's படம்

சிரிப்பு 17

நீதிபதி : வீட்டுக்கு ரெய்ட் பண்ண வந்தவங்ககிட்ட "ஈ"ன்னு உங்க பல்லை காட்டினீங்களாமே?
குற்றவாளி : என் "சொத்தை"யெல்லாம் காட்டச் சொன்னாங்க . . . அதான்
Big smile Big smile Big smile
Big smile Big smile Big smile "தலைவரே... உங்களுக்கு கம்ப்யூட்டர் பத்தி சொல்லித்தர வந்தவரை ஏன் துரத்திட்டீங்க?"
"டி.வி. பொட்டியைக் காட்டி "மானிட்டர்"னு சொல்றான். "மானிட்டர்னா சரக்குன்னு கூட தெரியாத ஒருத்தன் கிட்ட நான் கத்துக்கறதுக்கு என்னய்யா இருக்கு...?"


prabhuma12's படம்

கடிகள்!

என்னது! துணி துவைக்க "தாஜ்மகாலுக்கு" போறியா?
ஏன்?
அங்கதானே நிறைய சலவைக்கல் இருக்கு!
Big smile Big smile Big smile

வெயிட்டே இல்லாத "ஹவுஸ்" எது?
"லைட் ஹவுஸ்"
Laughing out loud Laughing out loud Laughing out loud

அந்த பாம்புக்கு என்ன நோயாம்...?
வேற என்ன 'புற்று'நோய் தான்.
Tongue Tongue Tongue


smariappan's படம்

சிரிப்பு 16

உமா : டாக்டருக்கு படிக்கலாம்னு இருந்தேன், பாதிலயே படிப்பை நிறுத்த வேண்டியதா போச்சு.
மாரி : அப்புறம் ?
உமா : அஞ்சாங் கிளாஸோட ஸ்கூல் லைஃப்புக்கு முற்றுப் புள்ளி வெச்சிட்டேன்
Big smile Big smile Big smile
Big smile Big smile Big smile
நிருபர்: திருமணத்திற்க்கு பிறகு படங்களில் நடிப்பீர்களா

நடிகை : என்னுடைய கனவர் சம்மதித்தால் நடிப்பேன்

நிருபர் : சம்மதிக்கலனா?

நடிகை : டைவர்ஸ் பன்னிட்டு நடிப்பேன்.


smariappan's படம்

சிரிப்பு 15

மாரி : ஏன் இத்தனை அவசரம் அவசரமாகப் பெயிண்ட் அடிக்கிறாய்?
உமா : பெயிண்ட் தீர்ந்து விடுவதற்குள் அடித்துவிட வேண்டும் என்பதற்காகத்தான்.
Big smile Big smile Big smile

ராமு : என்னோட நாலு தம்பிங்க குளத்திலே விழுந்துட்டாங்க. ஒருத்தன் தலைமுடி மட்டும் தான் நனைஞ்சது.
சோமு : அப்படியா! மத்த மூணு பேருக்கும் நீச்சல் தெரியுமா?
ராமு : இல்லை. அவங்கள்ளாம் மொட்டை.
Big smile Big smile Big smile

உமா : ஏழு வருஷமா லவ் பண்றோம். இன்னும் நீங்க கல்யாணப் பேச்சையே எடுக்கலையே?
பிராபகரன் : சரி உமா, இப்ப கேட்கறேன்.. எப்போ உன் கல்யாணம்?
Big smile Big smile Big smile


smariappan's படம்

சிரிப்பு 14

‘‘கழுத்துலதங்கச் சங்கிலிபோட்டுக்கிட்டு கலக்குறே மச்சான்.. சங்கிலியும் கழுத்துமா உன்னை பார்க்கறப்ப எங்க வீட்டு டாமி ஞாபகம்தான் வருது!
Big smile Big smile Big smile

இரண்டு ஆண்யானைகள் பேசிக்கொண்டு நின்றிருந்தன. அப்போது ஒரு பெண் யானை அவற்றைக் கடந்து சென்றது. ஒரு ஆண்யானை, மற்றொரு யானையிடம் சொன்னது| ‘‘பியூட்டிஃபுல்… 3600, 2800.. 3600!’’
Big smile Big smile Big smile

‘‘எங்கு சென்றாலும்புதிதாய் என்ன செய்தாலும்உன் குரலைக் கேட்டுவிட்டேஎதுவும் செய்ய விரும்புகிறேன். கழுதை கத்தினால் நல்ல சகுனமாமே!’’
Big smile Big smile Big smile


smariappan's படம்

இராவணன் சாங் ரீ மீக்ஸ்...

இராவணன் சாங் ரீ மீக்ஸ்... காலேஜ் கடைசி பெஞ்ச் மாணவர்கள்.. பாடுகின்றார்கள்...

உசிரே போகுது உசிரே போகுது டிகிரி படிச்சி முடிக்கையில்

நாங்க தவிக்கிறோம் மடிப்பிச்சை கேட்கிறோம் இன்டர்னல் மார்க் போடயில...

எக்சாம் என்று தெரிஞ்சி இருந்தும் கண்கள் தூங்க துடிக்குதடி...

தப்பு என்று தெரிஞ்சிருந்தும் பிட்டு அடிக்க துடிக்குதடி...

உசிரே போகுது உசிரே போகுது டிகிரி படிச்சி முடிக்கையில்...
Big smile Big smile Big smile

 

 

This free website was made using Yola.

No HTML skills required. Build your website in minutes.

Go to www.yola.com and sign up today!

Make a free website with Yola